×

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் நடந்த என்.ஐ.ஏ சோதனை நிறைவு: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

திருச்சி: திருச்சி சண்முகா நகரில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் நடந்த என்.ஐ.ஏ சோதனை நிறைவு பெற்றுள்ளது சாட்டை துரைமுருகன் மனைவி மாதரசியிடம் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சோதனையை முடித்துவிட்டு சாட்டை துரைமுருகன் மனைவியிடம் சம்மன் கடிதத்தை கொடுத்துவிட்டு என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்றனர். வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றது தொடர்பாக சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சியினுடைய மாநில துணை பொதுச் செயலாளராகவும் செய்து தொடர்பாளர் மற்றும் கொள்கை பரப்பு தொடர்பாளராகவும் இருப்பர் சாட்டை துரைமுருகன். இவர் சாட்டை என்கின்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகின்றார். இவருடைய வீடு திருச்சியில் சண்முக நகரில் அமைந்துள்ளது. இவருடைய வீட்டிற்கு இன்று காலை 5 மணி அளவில் ஒரு 5 பேர் கொண்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் குழுவினர் வந்தனர்.

சாட்டை துரைமுருகன் வீட்டில் இல்லாமல் சென்னையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவருடைய மனைவி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அவருடைய மனைவியிடம் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். சுமார் ஒரு மூன்று மணி நேரம் மேலாக இந்த விசாரணை நடைபெற்று வந்துள்ளது. விசாரணை முடிவில் அவருடைய வீட்டில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 7ம் தேதி அவர் மீண்டும் ஆஜராக வேண்டும் என்று சம்மன் சாட்டை துரைமுருகனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சோதனை பொறுத்தவரையில் இவர் நாம் தமிழர் கட்சிக்கு வெளிநாடுகளில் நிதி திரட்டிய தாகவும் அதற்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும் சட்டவிரோதமாக நிதி திரட்டுவதாக கூறப்படுகிறது. அதேபோல் தடை செய்யப்பட்ட ஏக்கங்கள் உடன் தொடர்பு வைத்திருப்பது அந்த தடை செய்யப்பட்டிருக்கின்றன ஏக்கங்கள் மீட்டுருவாக்கம் செய்வதற்காக நிதி திரட்டுவது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் : திருச்சி சண்முகா நகரில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் நடந்த என்.ஐ .ஏ. சோதனை நிறைவு பெற்றுள்ளது.

The post நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் நடந்த என்.ஐ.ஏ சோதனை நிறைவு: முக்கிய ஆவணங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : NIA ,Naam Tamilar Party ,Chatta Duraimurugan ,Tiruchi ,Chattai Duraimurugan ,Tiruchi Sanmuka Nagar ,Matarasi ,
× RELATED தடையை மீறி போராட்டம் அறிவிப்பு; நாம்...